சகிப்பின்மை அலையினை கட்டுப்படுத்தல்: மத சுதந்திரத்தை ஊக்குவிக்கும் தெற்காசிய ஊடகவியலாளர்களின் வலையமைப்பு

தெற்காசியா ஒரு துடிப்பான ஊடக கலாசாரமொன்றைக் கொண்ட பிராந்தியமாகும், இருப்பினும், மதம் பற்றிய விடயங்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்டு, முக்கிய அரசியல் நிகழ்வுகளின் கட்டமைப்பிற்குள் மட்டுமே ஆராயப்படுகிறது. ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்படுகிறார்கள்; தீவிரவாத மற்றும் மதச்சார்பற்ற குழுக்களால் தங்கள் பணிக்காக குறிவைக்கப்படுபவர்களாகவும் பெரும்பாலும் உள்ளார்கள்; மத சிறுபான்மையினரை பாதிக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில் இருந்து அவர்கள் தடுக்கவும் படுகிறார்கள்.

South Asia Journalism Workshop

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் உள்ளோரைக் கொண்ட, செல்வாக்குமிக்க ஒரு குழுவை உருவாக்கி, ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையம் (ICFJ) மதத் துன்புறுத்தலுக்குத் தூண்டுதல்களாக உள்ள அடிப்படைக் காரணிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்காக ஒன்றிணைக்கவுள்ளது.

பன்முகத்தன்மையைத் தழுவி, மத சுதந்திரங்களை முன்னேற்றும் செய்தி முன்னோக்குகளைச் சுற்றி வாசகர்களையும் நேயர்களையும் ஈடுபடுத்த அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நீடித்த பிராந்திய வலையமைப்பை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

திட்டம் பற்றி

இந்த திட்டம் மெய்நிகர் நேரடி பயிற்சிகள், வழிகாட்டுதல் மற்றும் பத்திரிகையாளர்கள், டிஜிட்டல் செல்வாக்கு செலுத்துபவர்கள், ப்ளொக் பதிவாளர்கள், சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் உள்ள குடிமக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது.

நடவடிக்கை நிரல்: மத சுதந்திரத்தை அறிக்கையிடுவது தொடர்பான பின்வருவனவற்றை உள்ளடக்கியதாய் இருக்கும்

  • மதங்கள் குறித்த அறிக்கையிடுதலின் அடிப்படைகளை மையமாகக் கொண்ட எட்டு வார ஆன்லைன் பாடநெறி
  • நடைமுறை திறன் மேம்பாடு குறித்த பயிற்சிக்கான ஐந்து நாள் பட்டறை
  • ஆன்லைன் பாடநெறி மற்றும் பட்டறையில் பங்கேற்பாளர்களுக்கான மெய்நிகர் வழிகாட்டல்
  • பங்கேற்பாளர்களுக்கான அறிக்கையிடல் மானியங்கள்
  • மத சுதந்திரம் குறித்த பங்கேற்பாளர் கதைகள் தொடர்பாக இடம்பெறும் வெபினார்கள் (மெய்நிகர் கலந்துரையாடல்கள்)
  • மதங்கள் குறித்த அறிக்கையிடுதக்கான கருவித்தொகுப்பொன்றை  உருவாக்குதல்

ஆன்லைன் பயிற்சி ஆங்கிலம், உருது, ஹிந்தி, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய ஐந்து

இந்த பாடநெறியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 1, 2023 திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.